தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.
தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும். கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்ய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.