இந்தியா,இலங்கை உட்பட நாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலமாக துபாய் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
இந்தியா ,இலங்கை ,நேபாளம் ,பாகிஸ்தான் , உட்பட 6 நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி குடியிருப்பு விசா உள்ளவர்கள் பரிசோதனை முடிவுடன் மத்திய அடையாளம் ,குடியுரிமை ஆணையம் ,குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகத்தில் முன் அனுமதியுடன் நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது .இதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இந்தியா ,இலங்கை பாகிஸ்தான் உட்பட 6 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அந்த நாடுகளில் இருந்த விசிட் விசா மூலமாக துபாய்க்கு வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து சத்யதேவ் சுசர்லா என்ற நபர் ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் ‘நான் அமீரகத்தில் வசித்து வருகிறேன் .என்னுடைய 16 வயது மகனுக்கு தடுப்பூசி போடவில்லை. தற்போது என்னுடைய மகன் விசிட் விசா மூலமாக துபாய்க்கு வருவதற்கு அர்மீனியாவின் தலைநகர் ஏரவன் நகரில் நகரில் 14 நாட்கள் தங்கிய பிறகு அங்கிருந்து வரலாமா? ‘என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனம்,’ உங்கள் மகன் இந்தியா உட்பட குறிப்பிட்ட 6 நாடுகளுக்கு வெளியே 14 நாட்கள் தங்கிய பிறகு விசிட் விசா மூலமாக துபாய்க்கு வரலாம். இங்கு வரும்போது அவருக்கு மற்ற விதிமுறைகள் அனைத்தும் பொருந்தும் என பதில் அளித்துள்ளது.
இதையடுத்து நாட்டிற்கு வெளியே 14 நாட்கள் தங்கிய பிறகு விசிட் விசா மூலமாகவும் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளத .இதேபோல வெளிநாடுகளில் 14 நாட்கள் தங்கிய பிறகு நாட்டிற்கு வரும் பயணிகள் அனைவரும் விமானம் புறப்படுவதற்கு முன்பாக 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளை க்யூ.ஆர் கோட் வசதியுடன் கையில் வைத்திருக்க வேண்டும் .அத்துடன் விமான நிலையத்தில் செய்யப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் கட்டாயமாகும். இதன்பிறகு துபாய் விமான நிலையத்தில் வந்த உடனே மீண்டும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் .இத்தகவலை பிளை துபாய் விமான நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.