Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோகம்….!!

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமூர்த்தி சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து கல்குவாரி குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திருமூர்த்தி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |