தமிழகத்தில் கொரோனா சற்று குறையும் நிலையில், செப்டம்பர் 1 முதல் 9 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் யாருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டால் விடுமுறை நீட்டிகப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆந்திராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.