Categories
உலக செய்திகள்

ஹமாஸ் அமைப்பினரின் பலூன் தாக்குதல்…. இஸ்ரேல் விமானப் படையினரின் தகுந்த பதிலடி…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களின் மூலம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் விமானப்படையினர் அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

இஸ்ரேலுக்கும் அந்நாட்டால் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் காசா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையை தொடர்ந்து பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் நாட்டினுடைய வடக்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

அதாவது பாலஸ்தீனர்கள் பலூன் முழுவதும் ஏரி வாயுவை நிரப்பி அதனை இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏவியுள்ளார்கள். இவ்வாறு ஏவப்பட்ட அந்த தீப்பிடிக்கும் பலூன்கள் இஸ்ரேல் நாட்டினுடைய வடக்கு வனப்பகுதிக்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து ஏரி வாயு நிரப்பப்பட்ட பலூன்களின் மூலம் வனப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நினைத்த இஸ்ரேல் நாட்டின் விமான படையினர் ஹமாஸ் அமைப்பினர்கள் ஆயுதம் தயாரிக்கும் இடம் மற்றும் ராக்கெட் ஏவு மையம் போன்றவற்றை குறிவைத்து வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஹமாஸ் அமைப்பினர்கள் ஆயுதம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மையம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |