Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற தம்பதிகள்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு…!!

தம்பதிகளை தாக்கி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலியநாயக்கன்பாளையம் பகுதியில் வின்சென்ட் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரவிக்குமார் தனது மனைவியான நிர்மலாவை அழைத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர்கள் கண்டபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த தம்பதிகளை வழிமறித்துள்ளனர்.

அதன் பின் 2 மர்ம நபர்களும் தம்பதிகளை தாக்கி நிர்மலாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரவிக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |