மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீலாளம் கிராமத்தில் முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களாக முனியப்பா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முனியப்பா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.