பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் அதிக அளவில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.