நாடுமுழுவதும் 363 எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 2019 முதல் 2001 வரை 642 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953 எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு ஜனநாயகத்திற்கான சமூக அமைப்புகள் ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது. தேர்தலின் போது வேட்பு மனுவில் அளித்த தகவல்கள் அடிப்படையில் 67 எம்பிக்கள் 296 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 363 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். ஆறு ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது. இதில் பிஜேபியை சேர்ந்த 83 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 47 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20-க்கும், பீகாரில் 54 பேர் மீதும் கேரளாவில் 42 பேர் மீதும் கொடூரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.