Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. சாலையில் திரண்ட பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பிழா மூலா பகுதியிலிருக்கும் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தேவாலா பஜாருக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் போன்றோர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |