தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சின்னாலகோம்பை ஆதிவாசி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் 2 குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் இந்த தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. எனவே வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.