காட்டெருமை அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்கா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காட்டெருமை ஒன்று இந்த பூங்கா அருகில் நடந்து சென்றுள்ளது.
இதனை பார்த்ததும் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் குன்னூர்-கோத்தகிரி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.