வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அபிராமேஸ்வரர் நகரில் ஜெயபால்-ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தியின் தயாரான ரங்கநாயகி என்பவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஆனந்தி அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 1 1 /2 லட்சம் ரூபாய் பணம், 9 பவுன் தங்க நகை, வெள்ளி குத்து விளக்குகள் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.