Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் புரவி எடுப்பு விழா… அனுமதி வழங்க வேண்டும்… கிராம மக்கள் அளித்த மனு…!!

சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புரவி  எடுப்பு  விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புரவி எடுக்கும் விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கோவில் புரவி எடுப்பு விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  பரிசீலித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |