கடந்த 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சரின் அனுமதிக்காக காத்திருந்ததால் தான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் நந்தகுமார் முந்திய அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை உடனடியாக திறக்க தவறியதால் உடைப்பு ஏற்பட்டது சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் இடைப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கத்திருக்கு சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து வந்த தண்ணீர் அதிகளவில் வந்ததாலேயே ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது என்றும் ஏரி உடையவில்லை என்றும் விளக்கமளித்தார். அப்போது குறுக்கிட்ட சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்காக முதலமைச்சரின் அனுமதி தாமதமாக கிடைத்ததால் ஒரே நேரத்தில் ஏராளமான தண்ணீர் வெளியேற்றப்பட்டு சென்னை வெள்ளக் காடாக மாறியது என கூறினார்.
இதனை திட்ட வட்டமாக மறுத்த எடப்பாடி பழனிசாமி யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை என்றும் நீர்நிலைகள் நிரம்பும் போது ஏரிகளை திறந்து உபரி நீரை வெளியேற்றுவது அந்ததந்த அதிகாரிகளின் தீர்மானிப்பது என்றும் வழக்கமான நடவடிக்கை என்றும் மீண்டும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த போது அதனை திறப்பதற்கு முதலமைச்சரின் அனுமதிக்காக நான்கு நாட்கள் காத்திருந்ததால் தான் சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.