அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துவரிமான் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று தினமும் குளித்து வருவது வழக்கம். அதன்படி தோட்டத்திற்கு செல்வதற்காக திண்டுக்கல்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமணன் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனை சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.