Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முற்றுகையிட்ட காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானைகள் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் பிழாமூலா பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் நள்ளிரவு நேரத்தில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் ராமையா, சுப்பிரமணி மற்றும் கதிர்வேலு ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் பின்பக்க வாசல் வழியாக கதிர்வேலு, ராமையா மற்றும் சுப்ரமணியன் குடும்பத்தினர் தப்பித்து வெளியே ஓடி விட்டனர். அதன் பின் அதிகாலையில் காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் சேதப்படுத்திய வீடுகளை பார்வையிட்டுள்ளனர். அப்போது காட்டு யானைகள் சேதப்படுத்திய வீடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |