ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரம், அதனால் உலகம் மற்றும் பிராந்தியம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்துள்ளனர்.
Spoke to Chancellor Merkel this evening and discussed bilateral, multilateral and regional issues, including recent developments in Afghanistan. Reiterated our commitment to strengthening the India-Germany Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) August 23, 2021
இதற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி “ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் இன்று தொலைபேசியில் பேசியதாகவும், ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரம் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும்” தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இந்தியா-ஜெர்மனி கூட்டமைப்பை வலுபடுத்துவதற்கான உறுதிபாடுகள் குறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.