வீட்டில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவில் வின்னிபெக் நகரத்தில் உள்ளது young street. இந்த தெருவில் 500 வது பிளாக்கில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று 45 வயதான Deena Anne Markwick என்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறியதில் “வீட்டில் தனியாக இருந்த Deena வை Laura Fay Buboire என்ற 3௦ வயதுடைய இளம்பெண் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். இவர் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் Laura தேடப்படும் குற்றாவாளி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் போலீசாரிடமிருந்து தலைமறைவாக இருப்பினும் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துள்ளார். இவர் மீது கனடா அளவில் பிடிவாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் Lauraவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவரை கண்டுப்பிடிப்பதற்காக Lauraவின் அங்கு அடையாளங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் “தோராயமாக 5.4 உயரமும், 134 பவுண்டு எடையுடனும் இருப்பார். அவரின் கண்கள் பச்சை நிறத்திலும் தலை முடியானது சிகப்பு அல்லது பிரவுன் நிறமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளனர். குறிப்பாக ஒரு வேளை Lauraவை பார்த்தாலோ அல்லது அவர் குறித்து ஏதும் செய்தி அறிந்தாலோ உடனே வின்னிபெக் போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.