Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லை பிரிக்க வேண்டாமா….? சகோதரருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து பிரச்சனையில் இருவர் இணைந்து முதியவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் விவசாயியான ரங்கநாதன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது சகோதரரான பஞ்சநாதன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பஞ்சநாதனும், அவரது மகன் விக்னேஷ் என்பவரும் இணைந்து பிரச்சனைக்குரிய வயலில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த ரங்கநாதன் வயலுக்கு சென்று இடத்தை அளந்து எல்லை பிரிப்பதற்கு முன்பு எவ்வாறு வேலி அமைக்கலாம் என்று கேட்டுள்ளார்.

அப்போது கோபமடைந்த பஞ்சநாதனும், விக்னேஷும் இணைந்து ரங்கநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த ரங்கநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பஞ்சநாதன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |