சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருசின்னபுரம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் இருவரின் குடும்பத்தினரும் கார்த்திக்கிற்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது 16 வயது சிறுமியை கார்த்திக் திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை திருமணம் நடத்திய குற்றத்திற்காக அன்புதாசன், காயத்ரி உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.