வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.