கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை, வெள்ளியணை, புளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் அடைமழை பெய்தது இதன் காரணமாக பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.