தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றார். இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக இருந்தது. அதனை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அது நடந்து முடிந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பெண் ஊழியர்களுக்கான மகப் பேறு கால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.