சர்வதேச அளவில் இலக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்தகம் எழுதுபவருக்காக அயர்லாந்தால் வழங்கப்படுவது தான் புக்கர் பரிசு. இதில் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்படும் புத்தகத்தையே தேர்வு செய்வர். ஒரு புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதனை புக்கர் பரிசுக்குத் தேர்வு செய்வர். புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கும், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவருக்கும் பரிசு சரிசமமாகப் பிரித்து கொடுக்கப்படும்.
1969ஆம் ஆண்டு இந்த விருது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு தி டெஸ்டமன்ட்ஸ் (The Testaments) என்ற புத்தகத்திற்காக மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), கேர்ள், வுமன், அதர் (Girl, Woman, Other) புத்தகத்திற்காக பெர்னர்டைன் எவரிஸ்டோ (Bernardine Evaristo) ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மார்கரெட் அட்வுட் கனடாவைச் சேர்ந்தவர், பெர்னர்டைன் எவரிஸ்டோ லண்டனைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.