Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு சீக்கிரம் புது ரேஷன் கார்டுகள்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாத பழங்குடியின மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பழங்குடியினர் நலத் துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் 36 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இந்த பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில் தமிழக அரசு ரூ.4000, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கியது. ஆனால் பழங்குடியின மக்களுக்கு ரேஷன் அட்டைகள் இல்லாததால் நிவாரணத்தை பெற முடியவில்லை. எனவே பழங்குடி மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, முறையான ஆய்வு செய்து ரேஷன் கார்டுகள் இல்லாத குடும்பத் திற்கு ரேஷன் அட்டைகள் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |