பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனன் டைட்டிலை வென்றார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பாலாஜி முருகதாஸ் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் ‘திருமணம் குறித்த திட்டம் என்ன?’ என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பாலாஜி முருகதாஸ் ‘எல்லோரும் இதை தான் கேட்கிறார்கள். நான் இப்போ தான் காலேஜ் முடித்தது போன்ற உணர்வில் இருக்கிறேன். திருமணம் பற்றி யோசிக்க சில ஆண்டுகள் ஆகும்’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.