ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ள தனது குடும்பத்தை எண்ணி வருத்தத்தில் உள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி ஆவார். ஆனால் இவர் ஆப்கானிஸ்தானின் முதல் விமானி என்பதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் சிக்கி இருக்கும் அவருடைய குடும்பத்தை எண்ணி விமானி நிலோபர் ரஹுமானி வருத்தத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “என் குடும்பம் ஆப்கானிஸ்தானில்தான் உள்ளது. அங்கு தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து என் குடும்பம் மிகுந்த அச்சத்தில் உள்ளது. இதனையடுத்து என் குடும்பம் நான் விமானி ஆவதற்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். நான் விமானி ஆவதற்கு அவர்கள் ஆதரவாக இருந்ததால் தலீபான்கள் அவர்களை குறி வைத்துள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்களால் ஏற்பட்ட சில விஷயங்களை தெரிந்த பிறகு எனக்கு உறக்கமும் வரவில்லை. என் மனமோ ஒரு நிலையில் இல்லை. என் குடும்பத்தின் பாதுகாப்பை எண்ணி எனக்கு மிகவும் பயமாக உள்ளது. தலீபான்கள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று கூறினாலும் அவர்கள் வாக்குறுதிகளை என்னால் நம்ப முடியவில்லை. பொதுவாக தலீபான்கள் பெண்களை அதிகம் காயப்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தும் குணம் உடையவர்கள். அங்குள்ள பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த தலீபான்களிடம் இருந்து பெண்களை யாராவது காப்பாற்றுங்கள்” என கூறியுள்ளார்.