தலீபான் தீவிரவாதி ஒருவர் மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கி நுனியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைபற்றியுள்ளதால் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்கள் அங்குள்ள மக்களுக்கு மிகவும் கொடூரமான விதிமுறைகளை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அதாவது ஆண் யாராவது அங்கு தாடியை ஷேவ் செய்தால் ஈவிரக்கமின்றி சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனையடுத்து தலீபான்கள் பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் விமான நிலையத்தில் இருக்கும் பொழுது எந்தவித சட்டத்தையும் நடைமுறைபடுத்தவில்லை. ஆனால் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின்பு ஒவ்வொருவருக்கும் பொருந்தும் பல கட்டுபாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள ஒரு கடை தெருவில் தனது மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞரை தலீபான் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கி நுனியால் மார்பில் குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து துப்பாக்கியை அவரது நெற்றியில் வைத்து கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பிறகு அங்கே இருந்த மற்றொரு தலீபான் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனை அங்கிருந்த பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.