ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.
அங்கிருந்த அமெரிக்க படைகளும் முழுவதுமாக வெளியேறிவிட்டன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து திறமையானவர்கள் வெளியேற்றக் கூடாது ஆப்கான் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதை அமெரிக்கா ஊக்குவிக்க கூடாது என்றும் பற்றிய பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து உறுதி பூண்டுள்ள மற்றும் தலிபான் செய்தி தொடர்பாளர் அமெரிக்காவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்