இளம் பெண்களை மீட்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த அல்லிசன் ரெனோ என்பவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் பெண்களை ஆப்கானில் இருந்து 60 வயதான அல்லிசன் ரெனோ என்ற அமெரிக்காவைச் சேர்ந்தவர் காப்பாற்றியுள்ளார். அதாவது “ஆப்கானிஸ்தானில் ரோபோட்டிக்ஸ் குழுவில் 10 இளம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆதிக்கம் செலுத்தியதனால் அங்குள்ள பெண்களின் நிலைமை மோசமாக உள்ளது என்பதனை ரெனோ தெரிந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கத்தாரில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியை ரெனோ தொடர்பு கொண்டுள்ளார்.
மேலும் அவரின் தோழியிடம் இருந்து தேவையான ஆவணங்களை சேகரித்துள்ளார். இதனை அடுத்து தகவல்களை சேகரித்த பின்பு காபூலில் இருந்து அந்த பெண்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு வேண்டிய பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இதன் பிறகு கத்தார் அரசு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய விமானம் மூலம் அந்த பெண்களை அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அந்த பெண்களை மீட்டதற்காக உலகமே அவரை SUPER HERO என்று அழைத்து வருகிறது. இந்த நிலையில் ரெனோ தனது இன்ஸ்டாகிராமில் இரண்டாவது குழு பெண்களை வெளியேற்ற முடியவில்லை என்று மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் நான் எவரிடமும் இதுவரை உதவி கேட்டது இல்லை. ஆனால் இந்த முறை அனைவரும் ஆப்கானிய பெண்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.