இன்று தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக அரசு மகளிருக்கு வழங்கும் இருசக்கர வாகன உதவித் தொகை நிறுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கூறிய அறிவிப்பு உழைக்கும் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாகன உதவி என்பதற்கு மேல் யாரையும் எதிர்பாராமல், சார்ந்திராமல் வாழ பழகும் பெண்கள் முன்னேற்றத்தின் இயற்கையாக பாருங்கள். எனவே இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் .