Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான விகாஸ், விஜய் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2016 – ஆம் ஆண்டு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரனின் மகன் சிவபிரவீன் மற்றும் அவரது உறவினரான ஜெயமுருகன் ஆகிய 2 பேரும் செங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விகாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் திடீரென சிவபிரவீன், ஜெயமுருகன் ஆகிய 2 பேரையும் வெட்ட முயன்றனர்.

இதுகுறித்து சிவபிரவீன் மற்றும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் ஊருக்கு திரும்பி வந்து அங்கிருந்தவர்களிடம் முறையிட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள் விஜய் மற்றும் விகாஸ் ஆகிய இருவரையும் கற்கள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.அந்த விசாரணையில் கடந்த 21 – ஆம் தேதி கண்ணனின் மனைவி இறந்துவிட்டார்.

இதனால் அவரது உடலை தனது சொந்த ஊரான செங்குளத்தில் அடக்கம் செய்ய வந்த போது அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தட்டி கேட்பதற்காக வந்த கண்ணனின் மகன்களான விகாஸ் மற்றும் விஜய் ஆகியோரை கல்லால் தாக்கியது தெரியவந்துள்ளது. இதனால் விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிவபிரவீன் ஜெயமுருகன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கதிர்வேல், ஜெயமோகன், துரைபாண்டி, கருணாநிதி, ராஜமோகன் மற்றும் ரமேஷ் ஆகிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |