Categories
உலக செய்திகள்

காபூலில் விமானம் கடத்தல்…. செய்தி வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்…. மறுத்துள்ள உக்ரேன் அரசு….!!

விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அவர்களின் அதிகாரம் அங்கு கொடிகட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். மேலும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து காபூலில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று உக்ரேன் விமானம் ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Yevgeny Yenin கூறியுள்ளார்.

அதில் “செவ்வாய்க்கிழமை விமானமானது அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு சென்றுள்ளது. ஆனால் அந்த விமானத்தில் உக்ரேனியர்கள் எவரும் பயணிக்கவில்லை. குறிப்பாக காபூல் விமான நிலையத்திற்குள் மக்களால் நுழைய முடியவில்லை என்பதால் அவர்களை எங்களால் வெளியேற்ற முடியவில்லை. இதற்கிடையில் விமானத்தை கடத்தியவர்கள் கைகளில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்துள்ளனர்” என்று கூறியுள்ளார். எனினும் அந்த விமானத்திற்கு என்ன நடந்தது அல்லது அது உக்ரேனிடம் திரும்ப பெறப்பட்டதா போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இந்த கடத்தல் சம்பவத்திற்கு உக்ரேன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |