தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா தனது புதிய படத்திற்காக தயாராகி வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அவர் இந்தியிலும் ஃபேமிலி மேன் சீரிஸ் மூலம் அறிமுகமானார். தற்பொழுது சமந்தா அவர்கள் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகின்றார். ஏற்கனவே இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். இதற்கிடையில் இந்த படத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது அவரின் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.