கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தை ‘கடலூர் கிழக்கு’ , ‘கடலூர் வடக்கு’, ‘கடலூர் தெற்கு’ மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது.
கடலூர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் வடக்கு மாவட்டமாகவும் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் தெற்கு மாவட்டமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் கிழக்கு மாவட்டமாகவும் பிரிபகப்பட்டுள்ளது. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக எம்.சி சம்பத், தெற்கு மாவட்ட செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளராக கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்ட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.