Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! துணிவு இருக்கும்….! அலட்சியம் வேண்டாம்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பேச்சை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று எடுத்த காரியங்களில் எவ்வித தடை ஏற்பட்டாலும் தன்னம்பிக்கை மட்டும் இழக்க மாட்டீர்கள். துணிந்து எதிலும் செயல்படுவீர்கள். எந்த பிரச்சனையையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கவனம் வேண்டும். அலட்சியம் காட்டவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக சென்று வரவேண்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நட்பை சந்தேகப்பட வேண்டாம். ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை பேசி விடுவீர்கள். பேச்சை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்.

பேச்சை குறைத்துக் கொள்வது எப்போதும் நல்லது. எதிர்பாராத தனவரவு இருக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். காதலிலும் வெற்றி உறுதி. காதலினுடைய நிலைமை சரியாகி பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து முன்னேற்றம் கண்டிப்பாக ஏற்படும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த காதலுக்கு கூட இன்று ஒரு முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். ஆனால் உணர்ச்சிவசப்படாமல் எதையும் ஆலோசித்து செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென் கிழக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை

Categories

Tech |