Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அனுமதி வழங்கிய அரசு…. முழுமையான மகிழ்ச்சி இல்லை…. பயணிகள் கோரிக்கை….!!

சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் படகுத் துறை மற்றும் பூங்கா போன்றவை திறக்காததினால்  பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு பல இடங்களிலிருந்து மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தொற்றின் 2-வது அலை காரணத்தினால் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. பின்னர் தொற்று குறைந்து வந்த நிலையில் பூங்கா மற்றும் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாத் தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி போன்ற பல பகுதிகளிலிருந்து ஏலகிரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பூங்காகள் மற்றும் படகு துறை ஆகிய இடங்கள் பூட்டிக் கிடந்ததால் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து படகு இல்லம் ரோட்டில் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் வைத்த வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாததால் கவலைப்பட்டு வந்துள்ளனர். மேலும் சுற்றுலா தலத்தை  முழுவதுமாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |