Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டுக்கு புலம்பெயருதல்…. உதவும் ICCRC நிறுவனம்…. பயனடையும் மக்கள்….!!

ICCRC என்னும் ஒழுங்குமுறை அமைப்பு கனடாவில் உள்ள போலி ஏஜெண்டுகளை கண்டுபிடித்து அவர்களை தண்டித்து வருகின்றது.

கனடாவிற்கு குடும்ப சூழ்நிலையின் காரணமாக வருடம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உழைப்பதற்காக  புலம்பெயருகின்றனர். அதனை பயன்படுத்தி போலி ஏஜெண்டுகள் அவ்வாறு செல்லும் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் புலம்பெயருவதற்காக உதவும் உண்மையான ஏஜெண்டுகள் தேர்ந்தெடுக்க Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC department Canada) என்னும் ஒழுங்குமுறை அமைப்பு உதவுகின்றது. மேலும் இந்த அமைப்பு போலி ஏஜெண்டுகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றி வருகின்றது. இதனையடுத்து சரியான தகவல்களை கொடுத்து உண்மையான ஏஜெண்டுகளை தேர்ந்தெடுக்கவும் ICCRC அமைப்பு உதவுகின்றது.

இதனைத்தொடர்ந்து ICCRC ஒழுங்குமுறை அமைப்பு மோசடி செய்யும் ஏஜெண்டுகளை கண்டுபிடித்து அவர்களை தண்டித்தும் வருகின்றது. மக்கள் பலர் எப்படியேனும் வெளிநாடு சென்று உழைத்து குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று புறப்படுபவர்கள் போலி ஏஜெண்டுகளிடம் சிக்கிக்கொண்டால் என்னவாகும்?அவர் காலத்துக்கும் மீள முடியாத ஒரு கஷ்டத்திற்கு தள்ளப்படுவார். இவ்வாறு போலியான ஏஜெண்டுகளை நம்பி ஏமாந்த இந்தியர்கள் பலரின் வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் தொடர்கின்றது. தற்போது வரை கனடாவில் 44 போலி ஏஜெண்டுகளை ICCRC ஒழுங்குமுறை அமைப்பு கண்டுபிடித்து அவர்களை தண்டித்துள்ளது. மேலும் தண்டிக்கப்பட்ட ஏஜெண்டுகளின் பெயர் பட்டியல் ICCRC இணையத்தில் உள்ளது.

Categories

Tech |