ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானியப் படைகள் ஒரு வாரத்திற்குள் வெளியேறவில்லையென்றால் போர் நடத்த போவதாக தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Suhail Shaheen என்பவர் கடந்த 24 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறுயதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் எந்த நாடு அவர்களுக்கு விசா அளிக்க தயாராக உள்ளதோ அந்த நாட்டிற்கு செல்ல தடை இல்லை” என கூறியுள்ளார். ஆனால் அதே தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Suhail Shaheen மற்றொரு பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து நாடுகளின் படைகளும் தாங்கள் சொன்ன தேதிக்குள் வெளியேறியே ஆகவேண்டும்.
அப்படி இல்லையென்றால் போர் நடத்துவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு நேரத்திற்கு நேரம் மாற்றி மாற்றி பேசுவதையே தலீபான்கள் பழக்கமாக வைத்துள்ளதாக அவர்களது பேச்சு உறுதிசெய்துள்ளது. மேலும் பிரித்தானியா தங்களால் முடிந்த அளவிற்கு காபூல் விமான நிலையத்திற்கு மீட்பு விமானங்களை அனுப்பி ஆப்கானிஸ்தான் மக்களை மீட்டு வருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றும்மாறு அமெரிக்காவையும் வலியுறுத்தி வருகின்றனது. இருப்பினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த ஏழு நாட்களில் அமெரிக்க படைகளை காபூலிலிருந்து மீட்க முடிவு செய்துள்ளார்.