தங்கம் விலை கிராமுக்கு ரூ 12 மற்றும் பவுனுக்கு ரூ 96 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 12 ரூபாயும், சவரனுக்கு 96 ரூபாய்யும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 96 உயர்ந்து ரூ 29,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 12 உயர்ந்து ரூ 3,672 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுக்கள் உயர்ந்து ரூபாய் 49.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.