இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் இரண்டு தாள்கள் எழுத வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் 7 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011ம் வருடம் முதல் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லுபடியாகும் நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.