மரத்தில் சிக்கி காயமடைந்த கரடியை சிகிச்சைக்கு பிறகு வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது. இந்நிலையில் கரடி அங்குள்ள மரத்தின் மீது வேகமாக ஏறி தேன் குடித்து கொண்டிருந்தபோது திடீரென அதன் கை மரப்பொந்தில் சிக்கிவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயக்க ஊசி செலுத்தி மரத்தில் சிக்கி கொண்ட கரடியை பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து வனத்துறையினர் காயம் ஏற்பட்ட கரடியை கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது காயம் குணமடைந்ததால் கரடியை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.