கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளில் கல்விக் கல்லூரி இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து கல்லூரிகளும் தங்களுடைய கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள் போன்றவற்றில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அரசு கேட்கும்போது உடனே வழங்க வேண்டும். சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி போடாதவர்கள் கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தெரிந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.