Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது…. ஜெ.பி.நட்டா கண்டனம் ….!!!!

மத்திய அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் மும்பையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரையின்போது கொரோனா மீறியதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நாராயண் ரானே, “எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என முதல்வருக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை கடுமையாக அறைந்திருப்பேன்.” என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக கைது செய்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே ரத்னகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறிய செயலாகும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |