தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நோய்த்தொற்று உறுதியானால் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Categories