Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொந்தரவு பண்றாங்க” தம்பதிகளின் விபரீத முடிவு…. கோவையில் பரபரப்பு…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் முகமது அனீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாடியிலிருந்து தவறி விழுந்ததால் முகமது அனீஷின் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகமது அனீஸ் சிகிச்சைக்காகவும், குடும்பம் நடத்துவதற்காகவும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் முகமது அனீஷை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முகமது அனீஸ் தனது மனைவி மும்தாஜிடம் கடன் தொல்லை பற்றி கூறி வேதனைப்பட்டுள்ளார். மேலும் முகமது அனீஸ் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்கு மும்தாஜும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முகமது அனீஸ் மற்றும் மும்தாஜ் ஆகிய இருவரும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட இவர்களது மகன் தனது பெற்றோர் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |