Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |