தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் எடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக் கூடாது. மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள் – காது – வாயினை தேய்த்தல், எச்சில் துப்புதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் நுழையும் போது கைகளை சுத்தம் செய்து கொண்டு தான் நுழைய வேண்டும். ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
அங்கன்வாடி மையம் வரும் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்/பாதுகாவலர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது.