பட்டாசு தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உச்ச நீதிமன்றம் விதித்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. காலை , மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கக் கூடிய சூழ்நிலையில் பட்டாசு தொடர்பான 100_க்கும் அதிகமான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று பட்டாசு உற்பத்தியாளர் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்கிரி ஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்கு அனைத்தும் நிலுவையில் இருந்து வருகிறது. நீதிபதி சிக்கிரி_தான் இந்த வழக்கில் தீபாவளிக்கு காலையில் ஒரு மணி நேரம் , மாலை ஒரு மணி நேரம் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதித்தார். மேலும் பட்டாசு வெடிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி தலைநகர் டெல்லிக்கு கடும் நிபந்தனைகள் விதித்தார்.
இந்நிலையில் தற்போது பசுமைபட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பட்டாசு வழக்கு தொடர்பான வலக்கை விரைவாக விசாரிக்க வேண்டும். பசுமை பட்டாசுகள் நிறைய உற்பத்தி செய்து இருக்கின்றோம் எனவே கால நேரம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்க்க வேண்டுமென்று தெரிவித்தனர்.
ஆனால் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் இருப்பதால் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். மேலும் இன்னும் மூன்று நாட்கள் அயோத்தி வழக்கு விசாரணை க்கு இருக்கும் நிலையில் இது வேறு அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்கு எனவே அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.